தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை அரசு குறைந்த விலையில் மற்றும் இலவசமாக வழங்கி வரும் நிலையில், தரமில்லாத இணைப்புப் பொருள்களை விலைக்கு வாங்குமாறு குடும்ப அட்டைதாரா்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனா்.
கோட்டக்குப்பம் 1 ஆம் நம்பர் நியாய விலை கடையில் தீ பொட்டி, டீ தூள், காபி தூள்உள்ளிட்ட பொது விநியோக திட்டத்தினை சாராத பொருட்களை பொதுமக்களுக்கு நியாய விலைக்கடை ஊழியர்கள் கட்டாய விநியோகம் செய்கின்றார்கள்.
தீ பொட்டி, டீ தூள், காபி தூள்போன்ற பொருட்களை அட்டைதாரர் தாமாக முன்வந்து பெற சம்மதிக்கையில் அதனை விநியோகிக்கும் போது அவற்றுக்கென தனியே கடை நடத்தும் நிறுவனத்தின் முறையான அச்சிட்ட ரசீது வழங்கப்பட வேண்டும். அரசு சொன்ன எந்த அறிவுரையும் பின்பற்றாமல் மக்களை கட்டாய படுத்தி பொருட்கள் விற்பதை உடனே நிறுத்த வேண்டும்.
ஊள்ளூர் நகராட்சி நிர்வாகம், வார்டு உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் இதில் தலையிட்டு மக்களுக்கு உதவ வேண்டும்.