புத்தாண்டுக்குக் குவியும் கூட்டம்; அறை வாடகையை 4 மடங்கு உயர்த்திய புதுவை தனியார் விடுதிகள்..கோட்டகுப்பம் நோக்கிப் படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள்


புத்தாண்டுக்குக் குவியும் கூட்டம்; அறை வாடகையை 4 மடங்கு உயர்த்திய புதுவை தனியார் விடுதிகள்..கோட்டகுப்பம் நோக்கிப் படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள்

புதுச்சேரி – புத்தாண்டு கொண்டாட்டம்
புதுச்சேரி – புத்தாண்டு கொண்டாட்டம்
சுற்றுலா மாநிலமான புதுச்சேரி வருடம் முழுவதுமே சுற்றுலாப்பயணிகளால் நிறைந்து காணப்படும். பிரெஞ்சு கட்டடக்கலையையும், பிரெஞ்சு ஆளுநர்களின் பெயர்களையும் தாங்கி நிற்கும் வீதிகளைக் காண்பதற்கும், வீதிகள்தோறும் அணிவகுத்து நிற்கும் மதுக்கடைகளில் விதவிதமான மது வகைகளைச் சுவைத்துப் பார்க்கவும் பொதுமக்கள் வார இறுதி நாள்களில் புதுச்சேரியில் தஞ்சமடைந்துவிடுவார்கள்.

சில நாள்களுக்கு முன்பு தனியார் பயண ஏற்பாடு நிறுவனம் இணையத்தில் செய்த கணக்கெடுப்பில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இந்தியப் பயணிகளால் அதிகம் தேடப்படும் இடங்களில் புதுச்சேரி முதலிடம் பிடித்திருந்தது. அதனால் சுற்றுலாத்துறையும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும்விதமாக இசை, நடன நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டுக்குத் தயாராகிவருகிறது. அதேபோல தனியார் விடுதிகள், தங்கும் அறையுடன்கூடிய பார்களிலும் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இதைப் பயன்படுத்திக்கொண்ட தனியார் விடுதிகள், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பிருந்தே, தங்களது அறை வாடகையைப் பல மடங்கு உயர்த்திவிட்டன எனக் கூறப்படுகிறது. மேலும் சில விடுதிகளில், `ஜனவரி 2-ம் தேதி வரை அறைகள் இல்லை’ எனச் செயற்கையான தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றன எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. நகருக்குள் இருக்கும் சிறிய விடுதிகளில், சாதாரண நாள்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட நான்கு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, அண்ணாசாலையில் இருக்கும் சிறிய விடுதிகளில் சாதாரண நாள்களில் 24 மணி நேரத்துக்கு வசூலிக்கப்படும் வாடகை ரூ.2,500. ஆனால், அதே அறை தற்போது ’கிறிஸ்துமஸ் பேக்கேஜ்’ என்ற பெயரில் ரூ.8,000-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

அதேபோல நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதிகளில் இரண்டு முதல் மூன்று மடங்குவரை அறை வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகருக்குள் இருக்கும் நட்சத்திர விடுதிகளில் சதாரண நாள்களில் 12 மணி நேரத்துக்கு சுமார் ரூ.7,000 வசூலிக்கப்படும். அது தற்போது சுமார் ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. விடுதிகளின் புதிய வாடகைப் பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியடையும் சுற்றுலாப்பயணிகள், புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதிகளான கோட்டக்குப்பம், சின்னமுதலியார் சாவடியிலிருக்கும் விடுதிகளை நோக்கிப் படையெடுத்துவருகிறார்கள்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s