



கோட்டக்குப்பம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குரங்குகள் தொல்லை அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், சிறுவர்கள் சிரமத்திற்குள்ளாயினர்.
இதுகுறித்து மக்கள் வார்டு பிரதிநிதிகளிடம் புகார் அளித்தனர். இதன் எதிரொலியாக வனத்துறையினர் இன்று , கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசல் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை இம்சைபடுத்தி வந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர். பின்னர் குரங்குகளை வனப்பகுதிக்குள் விட்டனர்.
குரங்குகளை பிடிக்க பாடுபட்ட 18 வார்டு மாமன்ற உறுப்பினர் அனஸ் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.