
கோட்டக்குப்பம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பத்தாயிரத்திற்க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இதில் சில பகுதிகளில் ஐம்பதற்க்கும் மேற்ப்பட்ட குரங்குகள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீட்டில் உள்ள உணவு பொருட்கள், குடி தண்ணீர் ஆகியவையை சேதப்படுத்தி சென்றுவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். அதனால் பொது மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகளை புடிக்கும் பொருட்டு இன்று 01/12/2022 திண்டிவனம் வன சரக ரேஞ்சர் திருமிகு அஸ்வினி அவர்களிடம் கோட்டக்குப்பம் நகராட்சி 18வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஃபர்கத் சுல்தானா அவர்கள் நேரில் சென்று மனு அளித்துள்ளார்.. இரண்டு வாரதிற்குள் குரங்குகளை புடிக்க ஆவணம் செய்வதாக வனத்துறை ரேஞ்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.