
கோட்டகுப்பம் புறவழிச்சாலை இசிஆர் இல் உள்ள 28 மின்கம்பங்கள் எரியாமல் வெறும் காட்சி பொருளாக சுமார் ஒரு வருடமாக இருக்கிறது இந்த புறவழிச் சாலையில்l கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 17 விபத்துக்கள் நடந்துள்ளன இந்த விபத்துகளில் நான்கு பேர் இறந்தும் உள்ளனர் இந்த விபத்துக்கள் எல்லாம் இரவு நேரத்தில் தான் நடக்கிறது அதற்கு முக்கியமான காரணம் இருள்.
இந்த முக்கிய சாலைகளில், மின்விளக்குகள் எரியாததால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மின் கம்பங்களை பராமரிக்க வேண்டிய நகராட்சியோ அலட்சியமாக இருக்கிறது.
பலமுறை நகராட்சி அலுவலர் அவர்களுக்கும் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் காவல்துறை சார்பாகவும் பல கடிதங்கள் அனுப்பியுள்ளனர்,
வாகன ஓட்டிகளின் நலனுக்காக, மின்விளக்குகள் எரிய தேவையான நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.