


கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன கோட்டகுப்பம் அடுத்துள்ள புதுச்சேரி – சென்னை பைபாஸ் சாலை பழைய 555 தனியார் துணிக்கடை அருகே கடந்த இரண்டு மாதங்களில் இடையஞ்சாவடி சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மகனும் மற்றும் கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்த முஹம்மது சுலைமான்(40) ஆகிய இரண்டு உயிர்கள் அடுத்து அடுத்து எதிர்பாராத விதமாக மோட்டார் வாகனத்தில் செல்லும்போது மாடுகள் மீது மோதி பலியாகி உள்ளனர்.
அதேபோல் ஆரோவில் பகுதியில் உள்ள இடையஞ்சாவடி முரட்டாண்டி டோல்கேட் ,புதுச்சேரி அடுத்துள்ள சேதராப்பட்டு உள்ளிட்ட சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் திடீரென சாலையை கடக்கும்போது அவ்வழியே வரக்கூடிய வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி மாடுகள் மீது மோதி கை காலில் எலும்பு முறிவு போன்ற கொடுங்காயங்கள் ஏற்பட்டும் மேலும் உச்சகட்டமாக உயிரே போகும் நிலையும் உண்டாகிறது.
மேலும் தினந்தோறும் பகுதியில் மாடுகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட புதுச்சேரி மற்றும் தமிழக மாநில அரசுகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த அவல நிலையை போக்கி சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களை உடனடியாக அழைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.