விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட கிராம அதிகாரி அலுவல கட்டிட மேல் தளம் பழுதடைந்து மிக மோசமான நிலையில் மழை நீர் தற்போது அலுவலகத்தின் உள்ளே கசிந்து வரும் அவல நிலையில் உள்ளது. இருப்பினும் அலுவலக அதிகாரி பொது மக்களுக்கு அந்த கட்டிடத்திலிருந்து பயமறியாமல் பணி செய்து வருவது பாராட்டுக்குரியது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய விரைவில் அந்த கட்டிடத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.