




கோட்டாக்குப்பம் நகராட்சியின் 18வது வார்டுக்கான பகுதி சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் இன்று மதியம் 3 மணியவில் நடைபெற்றது.பகுதி சபை கூட்டத்திற்கு வார்டின் நகரமன்ற உறுப்பினர் மு. ஃபர்கத் சுல்தானா தலைமை தாங்கினார். கூட்டத்தின் செயலாளரும் நகராட்சியின் ஊழியருமான சூசை அவர்கள் பகுதி சபை கூட்டத்தின் நோக்கத்தை மக்களுக்கு விளக்கி பேசினார்..மேலும் நகராட்சியின் ஊழியர்கள் வீரமணி, தமிழ் செல்வன் ஆகியோரும் திரலான வார்டின் பொது மக்களும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
1.குண்டும் குழியுமாக இருக்கும் பெரிய தெருவிற்கு ரோடு போட வேண்டும்.
- பள்ளிவாசல் தெருவிற்கு புதியதாக குடிநீர் பைலைன் அமைத்து தர வேண்டும்.
- பழைய பட்டன பாதை கோவில் மேடு சந்திப்பில் ஸ்பீட் பிரேகர் அமைக்க வேண்டும்.
4.கோவில்மேடு ஆண்டோ ஸ்டாண்ட் அருகில் ஹை மாஸ் விளக்கு அமைக்கப்பட வேண்டும். - காஜியார் தெருவில் குப்பைகள் அகற்றி சுத்தமாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- வார்டு முழுவதும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொசு மருந்து அடிக்க வேண்டும்.
- ஒன்றாம் எண் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து ஒன்றை பெரிய தெருவில் உள்ள நகராட்சி கடையில் அமைக்க வேண்டும்.
- மாணவர்கள் இளைஞர்கள் விளையாடும் வண்ணம் வார்டில் வாலிபால் கோர்ட்டு அமைக்க வேண்டும்.
9.கடற்கரை தெருவில் உடைந்து இருக்கும் வாய்க்காலை சீரமைத்து தர வேண்டும். - வெறி நாய்கள் தொலையை கட்டுப்படுத்த வேண்டும்..என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
Vaமேலும் பகுதி சபை கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நகரமன்ற மு. ஃபர்கத் சுல்தானா அவர்கள் நன்றி சொல்லி கூட்டத்தை முடித்து வைத்தார்.