

புதுச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை ecrசாலை கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலியார்சாவடி ரிவேரா ஹோட்டல் அருகே உள்ள சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூமியடியில் அமைக்கப்பட்ட இருந்த குடிநீர் குழாய் பைப் இரண்டு இடங்களில் உடைந்து கடந்த சில தினங்களாக சாலையில் குடிநீர் வீணாக கசிந்து வருகிறது.
வாகன ஓட்டிகள் அதிக அளவில் செல்லக்கூடிய இந்த சாலையில் தண்ணீர் கசிந்து சாலையில் தேங்கியுள்ளதால் வாகன விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது .
கோட்டக்குப்பம் நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டுகிறோம்.