





6.8.2022 சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டகுப்பம் துணை மாவட்ட கிளை மற்றும் கிவ்ஸ் ஆம்புலன்ஸ் சேவை இணைந்து கோட்டக்குப்பம் பர்கத் நகர் அங்கன்வாடி மைய வளாகத்தில் உலக தாய்ப்பால் வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை செவிலியர் விமலா மற்றும் அங்கன்வாடி மேற்பார்வையாளர் பூங்கோதை தாய்ப்பால் வழங்குவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சுகந்தி, கிராம நிர்வாக அலுவலர் அழகநாதன், கோட்டகுப்பம் நகராட்சி மன்ற உறுப்பினர் நாசர் அலி, முத்தவல்லி பிலால் கலந்து கொண்டனர். ஆரோக்கிய உணவு குறித்த காய்கறி மற்றும் தானியங்கள் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பேரிச்சம் பழங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் நிர்வாகிகள் அப்துல் ரஷீத், ஹலில் பயாஸ், உமா மகேஸ்வரி, ஷேக், யாசின் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஜெயா, தனம் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.