

இன்று 27.07.2022 ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணியளவில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படும். பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி அலைக்கழிக்கும் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்,
சப் – இன்ஸ்பெக்டரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வானூர் வட்டக்குழு சார்பில் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் தோழர் எம்.கே.முருகன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர் எஸ் முத்துக்குமரன் தோழர்.
ஜி. ராஜேந்திரன் தோழர். சே. அறிவழகன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் .கே. தமிழ்ச்செல்வி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வானூர் வட்டத் தலைவர் தோழர். எம். யுகந்தி கோட்டக்குப்பம் நகராட்சி கவுன்சிலர் ஃபர்கத் சுல்தானா மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள்எஸ். பாலமுருகன். ஆர். சேகர். ஜெ. முகமது அனல். ஏ. அன்சாரி. கே. மாயவன். வி. சுந்தரமூர்த்தி. கே. நடராஜன். என். அசுவத்தாமன் மற்றும் கிளை செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் மாதர் சங்க தோழர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.