
கோட்டகுப்பதில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து காணப்பட்டது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பெரும்பாலான கோட்டக்குப்பம் மக்கள் பகல் நேரங்களில் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
இதனால் கோட்டக்குப்பம் வர்தக நிறுவனங்கள் ஓரளவு சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், உக்கிரத்தாண்டவமாடிய வெயிலை அடக்கும் வண்ணமாக கோட்டகுப்பதில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
பலத்த காற்றுடன் பெய்யும் இந்த மழை வெயிலின் தாக்கத்திலிருந்து சிக்கித் தவிக்கும் கோட்டக்குப்பம் மக்களை வெகுவாக விடுவிக்கும் எனலாம்.