
கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாக கமிட்டி ஏற்பாட்டில் இவ்வருடமும் அறிவித்தபடியே இன்று (10/07/2022) காலை 7:00 மணிக்கு ஈத்கா திறந்த வெளி திடலில் பெருநாள் தொழுகை சிறப்புடன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து குத்பா மற்றும் துவா செய்யப்பட்டது. முன்னதாக இளைஞர்களும்,பெரியோர்களும்,சிறுவர்களும் ஜாமி ஆ மஸ்ஜிதிலிருந்து காலை 6:15 மணிக்கு ஒன்றாக சேர்ந்து தக்பீர் முழக்கதுடன் ஊர்வலமாக ஈத்கா மைதானம் சேர்ந்தடைந்தனர்.
வெளியூரில் வெளிநாட்டில் வசிக்கும் கோட்டக்குப்பம் வாசிகள் இந்த முறை ஊருக்கு வந்து பெருநாளை சந்தோசத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதனால் கோட்டக்குப்பம் நகரம் பெருநாள் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளது.
பெருநாள் தொழுகை புகைப்பட அணிவகுப்பு உங்கள் பார்வைக்காக……..!






































