


கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொது நல சங்கம் KIWS சார்பாக ஊர் முழுவதும் மரம் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த மரங்களால் சில தெருக்கள் பசுமையாக காட்சி அளிக்கிறது.
ஆனால் இன்றும் சில இடங்களில் வளர்ந்து வரும் மரங்களை, அழிக்கும் கொடூர சம்பவம், கோட்டகுப்பதில் அடிக்கடி நடக்கிறது.
கோட்டக்குப்பம் காயிதே மில்லத் ஆர்ச் அருகே உள்ள மரத்துக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
இந்த மரம் இங்கு இருப்பதை இடையூறாக கருதும் சிலரால் நேற்று வரை, மிகவும் பசுமையாக அடர்ந்து 9 அடியில் வளர்ந்து காட்சி அளித்த இந்த மரம், இன்று கூண்டு உடைக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டு கருகி கிடக்கிறது.
மேலும் கோட்டக்குப்பம் தைக்கால் திடல் மற்றும் சில தெருக்களில், வீடுகளுக்கு எதிரில் இருக்கும் மரங்களும், இரக்கமற்ற சிலரால் இதுபோல் பிடுங்கிப்போடும் கொடூர சம்பவம், அடிக்கடி நடக்கிறது.
இதுகுறித்து, நகராட்சி அலுவலர்கள் கண்காணிப்பு கேமரா மற்றும் அக்கம், பக்கம் உள்ளோர் உதவியுடன் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.