





























நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி அவதூறு பேசிய கயவர்களை கண்டித்து கோட்டக்குப்பம் அணைத்து பள்ளிவாசல் ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் நடைப்பெற்றது.
முன்னதாக பேரணி கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜிதிலிருந்து புறப்பட்டது.
கோட்டக்குப்பம் அணைத்து மஹாலா ஜமாஅத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளூர் பேச்சாளர்களுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.