கோட்டகுப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.


அன்பார்ந்த மாணவர்களே!

அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன? எவ்வளவு செலவாகும் போன்ற கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 2022” , வருகின்ற ஜூன் 26-ம் தே‌தி, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது.

+2 விற்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவே ஒரு மாணவனின் முழு வாழ்க்கையும் நிர்ணயிக்கும். ஆகவே, இந்த முடிவினை தெளிவாக எடுக்க வேண்டும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு பல கல்வியாளர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர்.

ஆதலால், நமது கோட்டக்குப்பத்தை சார்ந்த அனைத்து 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து கூகுள் படிவத்தையும் பூர்த்தி செய்து, தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeHS68qccgG-N-uzuisVtz_0N5FhQag13ZDXjIRcJLVbB63cg/viewform

அல்லது

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு உங்களுடைய பெயர், தந்தை பெயர், வயது, தொலைப்பேசி எண், முகவரி, வகுப்பு, பள்ளியின் பெயர் போன்ற விவரங்கள் டைப் செய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பி தங்களின் வருகையை உறுதி செய்யலாம்.

10-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகள்:
A.R.SATHIK BASHA: +91 8056515736
S. Julfi: +91 9442070200

11 & 12-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகள்:
A. Hajath Ali: +91 9944342179
Abdul Malik: +91 9790968698

மேலும், நமதூரை சார்ந்த 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் முதல் மூன்று மாணவர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

ஆகவே, இந்த அறிய வாய்ப்பினை நமதூர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s