
நம் வீடுகளில் சேரும் குப்பைகளை இதுநாள்வரை ஒரே குப்பைத் தொட்டியில் போட்டு வந்துள்ளோம். இந்த நிலைமையை மாற்றி மக்கும் குப்பைகளை பச்சை நிறத் குப்பைத் தொட்டிகளிலும், மக்காத குப்பைகளை நீல நிற குப்பைத் தொட்டிகளிலும் போட வேண்டும். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எவை எவை என அறிந்து கொள்வதற்காக கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அதன் பயனை புரிந்து குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை பிரித்து வழங்குவதால் கழிவுகள் கழிவுப் பொருட்களாக இல்லாமல் பயனுள்ள பொருட்களாக பயன்படுத்த முடியும். குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் மறு சுழற்சி செய்ய எளிதாக இருக்கும். மேலும் மக்கும் குப்பையிலிருந்து உரமும், மக்காத குப்பையிலிருந்து பயோ ஆயில் தயாரிக்கப்படும். எனவே கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் உள்ளவர்கள், குப்பைகளை தரம் பிரித்து வழங்கி இந்த திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற உதவ வேண்டும்.