கோட்டக்குப்பம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோட்டக்குப்பம், அமிர்தா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி மனைவி நசீமா, 58; லியாகத்அலி, வெளி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். நசீமா நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த வேலை காரணமாக புதுச்சேரி சென்றார்.இரவு 9:00 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 30 சவரன் நகை மற்றும் 10000 ரூபாய் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இப்பகுதியில், அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகை பணம் கொள்ளை
Video credit : Ragav TV