

மத்திய அரசின் அதிவிரைவு படை (RAF -Rapid Action Force ) கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை இன்று ஆய்வு செய்தனர்.
இக்குழு கலவரம் மற்றும் அதுதொடர்பான அமைதியின்மையை கட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் துணை இராணுவ பிரிவு ஆகும்.
RAF குழு புதிதாக நம் மாவட்டத்திற்கு வருகை புரிந்திருப்பதால் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அவ் இடங்களுக்கு விரைந்து செல்ல பாதைகளை கண்டறிய இன்று அதிரடியாக ஆய்வு செய்தனர்.