
இலவச தையல் பயிற்சி பெற, பிளஸ் 2 முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பெண்கள், இல்லத்தரசிகள் சொந்த வருமானம் ஈட்டும் வகையில், புதுச்சேரி திப்புராயப் பேட்டையில் அருட்சகோதரிகளால் நடத்தப்படும் லாசர் கான்வென்ட்டில் இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இலவச தையல் பயிற்சி வகுப்பு ஜூன் 1ம் தேதி துவங்குகிறது. தினமும் மதியம் 2.௦௦ மணி முதல் மாலை 4.௦௦ வரை தையல் பயிற்சி அளிக்கப்படும்.பிளஸ் 2 முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க முன் பதிவு அவசியம். முன் பதிவிற்கு இன்று 24ம் தேதி முதல் 94423-53731 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.