வறுமைக்கோடு பட்டியல் 2022 ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?


வறுமைக்கோடு பட்டியல் 2022: நாட்டில் உள்ள அனைத்து ஏழை எளிய குடும்பங்களுக்கு அவர்களின் ஆண்டு வருமானத்தை பொறுத்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த பட்டியல் ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் நிலைமை, வீட்டின் தன்மை, குழந்தைகளின் கல்வி நிலைமை மேலும் அவர்கள் ஆண்டிற்கு சம்பாரிக்கும் வருமானம் ஆகியவற்றை பொறுத்தே வெளியிடப்படுகிறது.

தானியம், பருப்பு வகைகள், பால், சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவு பொருள்களை வாங்குவதற்கு தேவையான வருமானம் இல்லாதவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவார்கள். வருமானத்தை தவிர்த்து ஒருவர் சாப்பிடும் உணவின் அளவைப் பொருத்தும் வறுமை கோடு தீர்மானிக்கப்படுகிறது. நாம் இந்த பதிவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை எப்படி ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் – வறுமைக்கோடு பட்டியல் 2022:

  • வறுமைக்கோடு பட்டியல்: வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  • அங்காடியில் அண்ண யோஜனா மூலமாக 25 முதல் 30 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.
  • அரசு வேலைகளில் முன்னுரிமை கிடைக்கிறது.

How To Get Bpl List Online in Tamil:

வறுமைக்கோடு சான்றிதழ்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் முதலில் Google-ல் tipps.in (Tamil Nadu Integrated Poverty Portal Services) என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் உள்ள Draft BPL Family List வரைவு BPL குடும்ப பட்டியல் என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

varumai code list in tamil

பின் அவற்றில் நீங்கள் ஊரகமாக இருந்தால் ஊரகம் (Rural) என்பதை கிளிக் செய்யவும் அல்லது நகர்ப்புறமாக இருந்தால் நகர்ப்புறம் (Urban) என்பதை கிளிக் செய்யவும்.

வறுமைக்கோடு பட்டியல் 2022 – How To Check Bpl List Online Tamil:

வறுமைக்கோடு பட்டியல் ஆன்லைனில் பார்ப்பது எப்படி

பின் District என்பதை கிளிக் செய்து உங்களுடைய மாவட்டத்தை (District) செலக்ட் செய்யவும், Block என்பதை கிளிக் செய்து தாலுக்காவை செலக்ட் செய்யவும்.Village என்பதை கிளிக் செய்து உங்களுடைய கிராமத்தை செலக்ட் செய்யவும். பின் Habitation என்பதை கிளிக் செய்து உங்களுடைய கிராமத்தை செலக்ட் செய்து கொள்ளவும்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல்:

how to check bpl list online in tamil

வறுமைக்கோடு பட்டியல்: உங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து விட்டு Apply என்பதை கிளிக் செய்யவும். Apply என்று கொடுத்தவுடன் கீழே Scroll செய்து பார்த்தால் உங்கள் ஊரில் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பட்டியல் மற்றும் உங்களுடைய பெயரும் அதில் இருந்தால் வந்து விடும்.

குறிப்பு : கோட்டக்குப்பம் இன்னும் டவுன் பஞ்சாயத்து லிஸ்டில் தான் இந்த இணையத்தளத்தில் உள்ளது, கோட்டக்குப்பம் நகராட்சியில் தேடினால் பட்டியல் கிடைக்காது. மேலும் வார்டுகளும் பழைய டவுன் பஞ்சாயத்து வார்டு எண்ணில் பார்க்கவும் 👇👇👇

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s