


ஒரு வருடம் முன்பு கோட்டக்குப்பம் காவல் நிலையம் சுற்றுச்சுவரை விரிவுபடுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில், காவல் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள காந்தி ரோடு மற்றும் பழைய பட்டினம் பாதையும் இணைக்கும் குறுக்கு சாலையை மறித்து சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளதை கண்டு கோட்டகுப்பத்தில் உள்ள கட்சி பிரமுகர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் ஒன்று கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் சாலை அடைக்கக் கூடாது என்று கோட்டக்குப்பம் ஆய்வாளர் அவர்களிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
மேலும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து அனைத்து கட்சியின் சார்பாக மனு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுவர் வைப்பதை தள்ளி வைத்த காவல் துறை நேற்று மீண்டும் பணியை துவக்கினார். மீண்டும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
100 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பயன்படுத்தும் பாதையை தவிர்த்து மற்ற இடத்தில் காவல் துறை சுவர் எழுப்பி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.