


கோட்டக்குப்பம் முழுவதும் ஆங்காங்கே மாடுகள் உலாவுகின்றன. தினமும் 20 க்கும் மேற்பட்ட மாடுகளின் நடமாட்டம் காணப்படுகின்றன. தெருக்களில் வீடுகளின் முன்பே சாணமிட்டுச் செல்வதால் மக்கள் நடக்கவோ முடியாமல் அருவறுப்படைகிறார்கள்.
கோட்டக்குப்பம் நகராட்சி குறுகலான தெருக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சாலை விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் உள்ளன. ஊரில் தெருவில் நடமாடும் மக்களுக்கு இந்த மாடுகளால் தொல்லை.
இந்த மாடுகள் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தது கிடையாது, அருகிலிருக்கும் புதுவை முத்தியால்பேட்டையில் வளர்க்கும் மாடுகள், அங்கே சுற்றி தெரிந்தால் அபராதம் விதிக்கிறார்கள் என்று கோட்டக்குப்பம் பகுதியில் மேச்சலுக்கு விட்டு செல்கிறார்கள்.
சமீபத்தில் கூட ECR சாலையில் இரவில் பல மாடுகள் வாகனத்தில் அடிபட்டு இறந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
விபத்து ஏற்படும்போது காவல்துறையினர் கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை விடுவதும்,பின்னர் ஓரிரு நாள்களில் கால்நடைகள் மீண்டும் சாலைகளில் சுற்றித் திரிவதும் தொடர்கிறது.
எனவே, இப்பிரச்னையில் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு, கால்நடை வளர்ப்போரிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதையும் மீறி கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடுவோருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதைக் கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.