
கோட்டக்குப்பம் நகராட்சியை மேம்படுத்த வேண்டும் என நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட தனி இடங்களில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து குப்பை சேகரிக்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
தெருக்களிலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு குப்பைகள் கொட்ட கூடாது என்ற பெரிய அளவில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
கண்ட இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம் மேலும் குற்ற வழக்கும் பதியப்படும் ஏன நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் தானாக முன்வந்து ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அரசின் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் வெற்றி பெற முடியும். எனவே மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.