
இரண்டு மாநில காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்?
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தமிழக புதுச்சேரி உள்ளிட்ட இரண்டு மாநில எல்லைகளுக்கு உட்பட்ட நான்கு முனை சந்திப்பு உள்ளது.
தமிழகத்திலிருந்து புதுச்சேரி முத்தியால்பேட்டை வழியாக தினந்தோறும் மாணவர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வாகனத்தில் வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால் இங்கு போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது .
இந்தியா -பாகிஸ்தான் இடையே வாகா எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் எந்நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுபோல் தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட கோட்டக்குப்பம்- முத்தியால்பேட்டை போலீசார் குறிப்பிட்ட அந்த நான்குமுனை சந்திப்பில் புதுச்சேரி -தமிழக இரு மாநில போலீசார் கடந்த காலங்களில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தினந்தோறும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை தற்போது இரு மாநில போலீசார் அப்பகுதியை கண்டு கொள்ளாமல் இருப்பதால் அப்பகுதியில் தினந்தோறும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மாணவ மாணவியர்கள் சென்றுவர போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் .
எனவே தமிழக காவல்துறையும் புதுச்சேரி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட கோட்டகுப்பம் முத்தியால்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை நான்கு முனை சந்திப்பில் போலீசாரை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .