கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக சல்மான் மஸ்ஜித்க்கு ஒலி அமைப்பு வழங்கப்பட்டது


கோட்டக்குப்பம் பஜார் வீதியில் அமைந்துள்ள சல்மான் மஸ்ஜித் பள்ளியில் ஆம்ப்ளிபயர், ஸ்பீக்கர் மற்றும் மைக் பழுதடைந்து விட்டதால், புதிதாக வாங்கி தருமாறு கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்திற்கு விண்ணப்பம் செய்தார்கள், கடந்த 11-04-2022 அன்று கோரிக்கை கடிதம் பெறப்பட்டது.

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் நிர்வாக குழுவில் ஆலோசிக்கப்பட்டு ஒரு கணிசமான தொகை, ஜமாத் நிதியிலிருந்து தருவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர் பாக்கி தொகையை, குவைத் சுப்ரீம் டிராவல்ஸ் & கார்கோ நிறுவனர் ஜனாப் A.M. அபூபக்கர் சித்தீக் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்கள்.

(05/05/2022) வியாழக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் தாயகத்தில் இருக்கும் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் சல்மான் பள்ளிவாசல் கோரிக்கை பூர்த்தி செய்ய அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரூபாய் 38,242 மதிப்புள்ள ஆம்ப்ளிபயர், ஸ்பீக்கர் மற்றும் மைக் ஆகிய சாதனங்கள் சல்மான் மஸ்ஜித் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறிப்பு: சுப்ரீம் டிராவல்ஸ் & கார்கோ நிறுவனர் ஜனாப் A.M. அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கும் மற்றும் அவர்களின் நன்கொடையை பெற்றுத்தந்த கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் நிர்வாகி S.A. சையத் சாதிக் அவர்களுக்கு ஜமாத் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s