








கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. இங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து திண்பண்டங்களை எடுத்து செல்வது, சமைத்து வைத்திருப்பதை கீழே தள்ளிவிடுவது, என நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் பெருகி வருகிறது. மேலும், வீடுகள் மற்றும் கடைகளின் கூரைகள் மீது குதித்து சேதப்படுத்தி வருகின்றன. விரட்டுபவர்கள் மீது குரங்குகள் பாய்வதால், இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர், ஆணையர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.