
சகலவிதமான பாவங்களும் தீமைகளும் சுட்டெரிக்கப்பட – ஊன் ஒடுங்கி உயிர் வளர்க்கப்பட – உரிய நோன்பிருந்து உன்னதம் பெறும் ரமளான் பெருநாளில் ..
உடலையும் உயிரையும் மட்டுமல்ல ஜகாத் என்னும் ஏழைவரியைத்தந்து உள்ள செல்வங்களையும் தூய்மை செய்திடும்ம் நன்னாளாம் இந்த ஈகை திருநாளில்..
மண்ணில் மனிதம் தழைக்க – மாண்புயரும் பண்புகள் செழிக்க – வன்முறை ஒழிந்து தீவிரவாதம் அழிந்து எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலைக்க – சமத்துவமும் சகோதரத்துவமும் மணக்க – சாதி சமய நல்லிணக்கம் கோலோச்ச நல்லவை வெல்ல – அல்லவை அகல உறுதி கொள்வோம்.
ஈகை பெருநாள் இதய ,இனிய நல் வாழ்த்துக்கள்