

ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் ஒப்புதலோடு கடந்த இரண்டு வருடம் கொரோனாவால் தடைபட்டலைலத்துல் கத்ர் இரவில் கோட்டக்குப்பம் பாரம்பரியமான முறையில் பெரிய பள்ளிவாசல் அருகே விளக்குகளால் அலங்கரிக்கபட்டு மக்கள் பயன்படும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டக்குப்பம் நகராட்சி 18வது வார்டு வார்டில் வரும் இந்த பகுதியை கவுன்சிலர் சுல்தானா மற்றும் முஹம்மத் அனஸ் அவர்கள் லைட் வசதி செய்துகொடுத்து, மக்கள் இடற்பாடில்லாமல் வந்துபோக வழி அமைத்து கடைகள் அமைத்துள்ளார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பில் உள்ளனர். பெண்கள் பாதுகாப்பாய் கடைகளுக்கு வந்து செல்ல அணைத்து ஏற்பாடுகளும் அனஸ் மற்றும் அவர்களின் நண்பர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.




























