
கோட்டக்குப்பம் மக்கள் தங்கள் வார்டுகளுக்கு சரியான கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்தற்கு சாட்சியாக மக்கள் நலனுக்கு ஏற்ப வார்டு உறுப்பினர்கள் கடுமையாக உழைத்து கொண்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக கோட்டக்குப்பம் நகராட்சியின் பரகத் நகர் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மழைக்காலங்களில் மழை தேங்கியும் மற்ற நாட்களில் சாலையிலிருந்து கட்டிடத்தின் உள்ளே செல்ல சமமான பாதை இல்லாமல் பொதுமக்களும் குழந்தைகளும் மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள். தடுப்பூசி போடுவதற்கு வரும் கர்ப்பிணிப் பெண்களும், தாய்மார்களும் மிகுந்த சிரமத்துடன் அக்கட்டிடத்தை பயன்படுத்தி வந்துள்ளார்கள். மேலும் குழந்தைகள் அமரும் இடம் சமதளமாக இல்லாமல் தரை முழுவதும் பழுதடைந்து இருந்தது.
இதனைக்கண்ட பரகத் நகர், நகர்மன்ற உறுப்பினர் Y. நாசர் அலி அவர்கள் உடனடியாக அந்த கட்டிடம் மற்றும் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு அங்கன்வாடியை சூழ்ந்து தண்ணீர் நிற்பதை தவிர்க்கும் வண்ணமாக மண் நிரப்பி, கட்டிடத்திற்கு புது வண்ணம் தீட்டி இன்று புது பொலிவுடன் திகழ செய்துள்ளார்.
பல ஆண்டுகளாக இருந்து வந்த மக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுத்த நகர்மன்ற உறுப்பினர் Y. நாசர் அலி அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவிக்கிறார்கள்.
