2 சிறார்களை கொன்ற இளைஞன் சரமாரியாக வெட்டிக்கொலை: கோட்டகுப்பதில் நடந்த பயங்கரம்


ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இரண்டு சிறுவர்களை கொலை செய்த வழக்கில், ஜாமினில் வெளியே வந்த குற்றவாளியை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் புதுச்சேரி அருகே நடந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தையே உலுக்கிய, 13 வயது சிறுவன் தேவன்ராஜ் என்பவனை கட்டாயப்படுத்தி, ஓரினச்சேர்க்கை செய்து கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலிசார் விசாரணையில் மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (22), தேவன்ராஜை கட்டாயப்படுத்தி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு கொன்று புதைத்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த ரீனேஷ் (12) என்ற சிறுவனிடமும், அபினேஷ் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து அபினேஷை கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அபினேஷ், கோட்டகுப்பம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் அபினேஷ் மீது நிலுவையில் உள்ளது.

இப்படி இருக்கையில், நேற்று இரவு கோட்டக்குப்பம் மரைக்காயர் தோப்பு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அபினேஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த கோட்டகுப்பம் போலிஸார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு சிறுவர்களை கொலை செய்த, அபினேஷ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s