மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்‌ 25% முதல் 150% வரை சொத்து வரி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு


தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150% வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சொத்து வரியில்‌ பல ஆண்டுகளாக எந்த உயர்வும்‌ இல்லாததால்‌ உள்ளாட்‌சி அமைப்புகளின்‌ மொத்த வருவாயில்‌ சொந்த வருவாயின்‌ பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின்‌ செலவீனம்‌ பலமடங்கு உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யலாம்‌ என பரிந்துரைக்கப்பட்ட குழுவின்‌ அறிக்கையானது அரசால்‌ ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

  • 600 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
  • 601 முதல்‌ 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
  • 1201 முதல்‌ 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
  • 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்‌ சொத்துவரி உயர்வு செய்யப்படவுள்ளது.

தற்போது உள்ள சொத்து வரியில்‌, வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும்‌, தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும்‌ உயர்த்தப்படுகிறது.அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்‌ இதர 20 மாநகராட்சிகளில்‌, சொத்து மதிப்பு உயர்வு 2022-23ஆம்‌ நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது. சொத்து மதிப்பு உயர்வு குறித்த குழுவின்‌ அறிக்கையின்படி, சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதியில்‌ 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும்‌, சென்னையோடு 2011ல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்‌சிகளில்‌ 25 சதவீதம்‌ உயர்த்திடவும்‌.

மேலும்‌, சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதிகளில்‌ உள்ள 600- 1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீதம்‌, 1201- 1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்‌, 1801 சதுர அடிக்கு மேல்‌ பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 150 சதவீதம்‌ உயர்த்தவும்‌, சென்னையோடு 2011-ல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌, 600- 1200 சதுர அடிபரப்பளவுள்ள

குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம்‌, 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 75 சதவீதம்‌, 1801 சதுர அடிக்கு மேல்‌ பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதம்‌ உயர்த்தவும்‌ பரிந்துரைந்துள்ளது.

சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதிகளில்‌ வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150 சதவீதமும்‌, தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய கட்டடங்களுக்கு 10௦ சதவீதமும்‌, சென்னையோடு 2011-ல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌ உள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதம்‌, தொழில்‌ மற்றும்‌ கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம்‌, சொத்து வரியினை உயர்த்தவும்‌ குழு பரிந்துரைத்துள்ளது.

மேற்படி மாநகராட்சிகளின்‌ சொத்து வரி உயர்வு தொடர்பான குழுவின்‌ பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, அதனை

செயல்படுத்திட சம்பந்தப்பட்ட மாநகராட்சியின்‌ மாமன்றம்‌ மூலம்‌ நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய சொத்து வரி சீராய்வுகளின்‌ போது, குடியிருப்புகளின்‌ பரப்பளவிற்கு ஏற்றவாறு தனித்தனியாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள்‌ எடுக்கப்படவில்லை. ஆனால்‌ தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள்‌ அதிகம்‌ பாதிக்கப்படாத வகையில்‌

குடியிருப்புகளின்‌ பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.

1200 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள கட்டடங்கள்‌, பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ பிரதான பகுதியில்‌ 6240 சதவீதமும்‌ ஆகவும்‌, பெருநகர சென்னை மாநகராட்‌சியின்‌ பிற பகுதிகள்‌, மாநிலத்தின்‌ பிற 20 மாநகராட்‌ சிகள்‌, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்‌சிகளில்‌ 88 சதவீதமும்‌ அமைந்துள்ளது. ஆகவே, பெரும்பாலான மக்கள்‌ 1200 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவுள்ள வீடுகளில்‌ வசிப்பாதல்‌ இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தாது.

எனவே, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளைப்‌ பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது.

மாநகராட்சிகளைப்‌ பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின்‌ தீர்மானம்‌ பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s