
மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் மோட்டார் பறிமுதல் செய்வதுடன் 5000 ரூபாய் அபராதம் விதித்து குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் பானுமதி எச்சரித்துள்ளார்.
மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். இதனால் கடைசி பகுதிகளில் உள்ளவர்களுக்கு குடிநீர் முழுமையாக செல்வதில்லை. மின் மோட்டார்வைத்து தேவைக்கு அதிகமாக ஒவ்வொரு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தரை மட்ட தொட்டிகளில் சேமிக்கின்றனர். மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடிப்பது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின்படி மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த தொகை செலுத்தப்பட்ட பின்னர் தான் மறு இணைப்பு வழங்கப்படும்.
மேலும் மேற்படி மின்மோட்டார் பொருத்தி குடிநீர் பிடிப்பவர்களை ஆய்வு செய்ய நகராட்சி பணியாளர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படவேண்டும்.