

கோட்டகுப்பம் நகராட்சி நகரமன்ற கூட்டம் நகராட்சி மேல்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. நகரமன்ற தலைவர் S.S. ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். நகர மன்ற ஆணையர் பானுமதி வரவேற்றார்.
கூட்டத்தில் 27 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நியமன குழு உறுப்பினர் 25வது வார்டு கவுன்சிலர் சரவணன் (திமுக) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வரி விதிப்பு மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக
20 வது வார்டு கவுன்சிலர் சம்சாத் பேகம்(காங்),
19வது வார்டு கவுன்சிலர் அமீனா பானு(திமுக),
18வது வார்டு கவுன்சிலர் பர்கத் சுல்தானா(பிபிஎம்),
17வது வார்டு கவுன்சிலர் ரகமத்துல்லா(ஐயூஎம்எல்)
ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்
ஒப்பந்த குழு உறுப்பினராக 4வது வார்டு கவுன்சிலர் வீரப்பன்(திமுக) தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அனைத்து கவுன்சிலர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதி மக்களின் குறைகளை பேசினார்கள் இறுதியாக பேசிய நகரமன்ற தலைவர் S.S. ஜெயமூர்த்தி அவர்கள் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக சரி செய்து தரப்படும் என கூட்டத்தில் பேசினார்.
கூட்டத்தில் நகரமன்றத் துணைத்தலைவர் ஜீனத் பிவி முபாரக் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.