




கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நூறு ஆண்டுகளுக்கும் மேலான பள்ளி . ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வந்து தற்போது வெறும் 23 மாணவர்கள் தான் படிக்கிறார்கள் . இதே நிலை நீடித்து நூறு வருடப் பள்ளியை இழந்துவிடக் கூடாது என்னும் அக்கறையில் அரசு பள்ளியை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல – நீண்ட காலமாக துவக்கப் பள்ளியாகவே இருக்கும் இப் பள்ளியை தரம் உயர்த்த – மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தன் முயற்சியைத் தொடங்கிவிட்டார் கோட்டகுப்பம் நகராட்சி உறுப்பினர் ஃபர்கத் சுல்தானா .
இதில் அவருக்கு உதவிய பல நல்ல உள்ளங்களின் துணையோடு முதல் கட்டமாக பள்ளியின் வெளிப்புற தோற்றம் முழுமையாக வண்ணமயமாக்கப்பட்டு முடிக்கப்பட்டு இருக்கிறது . இன்னும் பள்ளியின் வகுப்புகளின் உட்புறச் சுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வண்ணமயமாக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது..
இந்த பெரும் பணிக்கு நமக்கு உதவி புரிந்த ஓவியர்கள் குரூஸ், வாசு மற்றும் மூர்த்தி ஆகியோர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசியரியர்,உதவி ஆசிரியர் மற்றும் கவுன்சிலர் ஃபர்கத் சுல்தானா ஆகியோர் புத்தகம் கொடுத்து நன்றியை தெரித்துக்கொண்டனர்..
நமது பள்ளியின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் உதவி செய்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..
கோட்டகுப்பம் நகராட்சி மன்ற உறுப்பினர் ஃபர்கத் சுல்தானாவின் சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் .💐💐💐💐