
வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2 சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 490 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒருமுறை 10 சதவீதம் முதல் 15 சதவீத கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய 2 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்த இரண்டு சுங்கச்சாவடிகளை அகற்ற அரசு கோரிக்கை விடுத்த நிலையில் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் 490 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தை பொறுத்தவரை 44 சுங்கச்சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில், குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது’ என்றார்.