

கோட்டக்குப்பம் அடுத்த கொழுவாரியில் சமத்துவபுர பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.கோட்டக்குப்பம் அடுத்த கொழுவாரியில் வரும் 5 தேதி முதல்வர் ஸ்டாலின் சமத்துவபுரத்தை திறந்து வைக்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஊரகவளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் மோகன் உடனிருந்தார்.