
இதுவரை திறந்தவெளி ஈத்கா திடல் நடைபெற பெருநாள் தொழுகை, கடந்த ஆண்டு கொரோனா தொற்றை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை ஒட்டி இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.
எப்போதும் பல்லாயிரம் பேர் ஒன்றாக தொழுது, பின்னர் தொழுகையை முடித்தவுடன் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவுவது கை கொடுப்பது போன்றவற்றை தவிர்த்துக் கொண்டனர்.
இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ஈத் பெருநாள் தொழுகை வழக்கம் போல் கோட்டக்குப்பம் பசுமை பொங்கும் ஈத்கா மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.