

22.3.2022, செவ்வாய்., இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை சார்பில் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கோட்டகுப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர் கல்வி ஆலோசகர் பேராசிரியர் முகமது இஸ்மாயில் அவர்கள் மாணவர்களுக்கு தண்ணீர் சேமிப்பை குறித்து உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு வானூர் வருவாய் வட்டாட்சியர் திரு. உமாமகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன், முதல் உதவி பயிற்சியாளர் தண்டபாணி அவர்கள் கோட்டக்குப்பம் நகர்மன்றத் தலைவர் ஜெயமூர்த்தி, அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பம் ரெட் கிராஸ் கிளை நிர்வாகிகள் அப்துல் ரஷீத், பயாஸ்,காதர், யாசின், உமா மகேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தனர்.





