

கோட்டக்குப்பம் கடற்கரையில் பல ஆண்டுகள் குப்பை அகற்றப்பட்டு சுத்தமாகியது ! களமிறங்கிய நகராட்சி
இதுநாள் வரை கோட்டக்குப்பம் கடற்பரப்பைக் காணவந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளும் பரவி கிடந்த குப்பைகளைப் பார்த்து முகம் சுளித்துவந்தனர். கடற்கரை கரையோரம் முழுவதும் குப்பைகள் அதிக அளவில் இருந்ததால் ஒருபுறம் துர்நாற்றம் வீசுவதோடு கடற்கரை அழகு முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வந்தது.
பல முறை பொதுமக்கள் முன்னர் பேரூராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு எடுத்துசென்றும் சரி செய்யாமல் இருந்தனர். சமீபத்தில் கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தேர்தல் நடந்து முடிந்தபின் காட்சிகள் மாறியது. கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் திரு S.S. ஜெயமூர்த்தி அவர்கள் இந்த பகுதியை பார்வையிட்டு இந்த இடத்தை உடனடியாக சுத்தப்படுத்த உத்தரவிட்டார். தற்போது கடற்கரை சுத்தப்படுத்தப்பட்டு மக்கள் கடல் அழகை ரசிக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.
கடற்கரையை சுத்தப்படுத்த உத்தரவிட்ட நகர தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

