
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் இரங்கல் செய்தி
மதரஸா மாணவ பருவத்திலேயே ஆன்மீக சிந்தனையில் அதிகம் ஆர்வம் கொண்டவர் அதற்காக பெரும் முயற்சி செய்து இளம்வயதிலேயே போளூர் மதனி ஹழ்ரத் அவர்களின் கலீபாவாக பாண்டிச்சேரி பகுதியில் சிறந்த அடையாளத்தை ஏற்படுத்தியவர்.
10 ஆண்டுகளுக்கு மேலாக மக்தப் மதரஸாவின் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி நிஸ்வான் மற்றும் மக்தப் மதரஸா வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்து மக்களின் அன்பை பெற்றவர்.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு பல்வேறு சமூக பணிகளுக்கு சிறந்த ஒத்துழைப்பு தந்த இளம் மௌலவி ஹாபிழ் முஹம்மது இக்பால் ஜைனி ஹழ்ரத் அவர்களின் வஃபாத் செய்தி பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் சிறந்த இடத்தை வழங்குவானாக.
அவர்களை பிரிந்து வாழும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்குவானாக . இப்படிக்கு
மவ்லவி M. முஹம்மது பாதுஷா மிஸ்பாஹி
மாநில செயலாளர்
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்.