




கோட்டக்குப்பம் நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு கோலாகலமாக நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையாளருமான பானுமதி புதிய நகர்மன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளை சேர்ந்த வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து வரும் 4-ஆம் தேதி நகராட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.