
கோட்டகுப்பதில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோட்டகுப்பதில் கடந்த சில தினங்களாக குரங்குகள் அதிகரித்துள்ளன. தெருக்களில் ஹாயாக சுற்றித் திரியும் இந்த குரங்குகள் தினமும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்களை துரத்துகின்றன. குழந்தைகளிடம் ஏதாவது பொருட்கள் வாங்கி அதை அபகரிக்க துரத்துவதால் குழந்தைகள் பயந்து அலறியடித்து ஓடுகின்றனர். அதுமட்டுமின்றி வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்கின்றன. துரத்தினால், கடிக்கப் பாய்கின்றன. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் வெளியே நிம்மதியாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கோட்டகுப்பதில் சுற்றித் திரியும் குரங்குகளைப் வனத்துறை வைத்து பிடித்து, காட்டில் விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினர்கள் இதற்கான முயற்சியை எடுக்கவும்..