

குடிநீர் விநியோகம் என்பது, மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் திறந்துவிட்டதும் வீடுகளில் இருக்கும் குடிநீர் குழாய்களில் தானாக வந்து விழ வேண்டும். ஆனால் கோட்டக்குப்பம் நகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் குழாய்களில் குடிநீர் வருவதில்லை. பொதுமக்கள், பழங்காலத்தை போல் கை பம்புகளை வைத்து அடித்து குடிநீர் பிடிக்கும் அவலமும், சில இடங்களில் மின் மோட்டரை கொண்டு குடிநீர் உறிஞ்சப்பட்டுவந்தது.
கோட்டக்குப்பம் 19 வார்டு கவுன்சிலர் அன்வர் அவர்களின் மனைவி ஆமினா பானு அவர்கள் ஜெயித்து வந்தால், வார்டில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரி செய்வேன் என்று சொல்லி தேர்தலில் மக்களிடம் ஓட்டு கேட்டார்.
தேர்தலில் ஜெயித்தபின், சொன்னது போல் குடிநீர் பிரச்சனையை தீர்க்க களமிறங்கிவிட்டார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாயில் மரவேர் அடைத்துக்கொண்டு தண்ணீர் செல்வதை தடுத்துள்ளது. இதனாலே வீடுகளுக்கு குடிநீர் குறைந்த அளவில் வந்துள்ளது.
தற்போது தைக்கால் தெரு பகுதியில் இந்த வேலையை தொடங்கியுள்ளார். இதே போல் நாட்டாண்மைக்கார தெரு, ஆசாத் தெருக்களில் நிலவும் இதே பிரச்சனையை சரி படுத்தவேண்டும்.
இந்த பகுதி குடிநீர் தேவைக்காக பெரிய பள்ளிவாசல் அருகில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு எடுத்துவரனும், இல்லை என்றால் அதை இடித்து தள்ளிவிட்டு, கோட்டக்குப்பம் ஊரின் நடு பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடை நீக்க ஊரில் மைய பகுதியில் ஒரு பம்பிங் ஸ்டேஷன் ஏற்படுத்தி, கால இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்யவேண்டும்.
மேலும் இதேபோல் கோட்டக்குப்பம் முழுவதும் அணைத்து வார்டுகளிலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு பதித்த குடிநீர் குழாய்களை மொத்தமாக எடுத்துவிட்டு, புதிதாக பெரிய குழாய் அமைக்கவேண்டும்.
வரும் கோடைகாலத்தை கருத்தில்கொண்டு துரிதமாக இந்த பணிகளை அந்தந்த பகுதியில் ஜெயித்த வார்டு கவுன்சிலர்கள் முன்னெடுக்கவேண்டும்.
கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவரும், அணைத்து வார்டு உறுப்பினர்களும், மக்களின் அன்றாட தேவையான குடிநீர் தாகத்தை தீர்க்கவேண்டும்.








