
கோட்டக்குப்பம் நகராட்சி, 8வது வார்டில் அ.தி.மு.க., வேட்பாளராக பாலசுப்ரமணியன், பா.ஜ., வேட்பாளர் கனகராஜ் போட்டியிட்டனர். இருவரும் தலா ஒரு ஓட்டு மட்டும் பெற்றனர். மேலும், 15வது வார்டில் அ.தி.மு.க.,வின் முகமது சேட் 5 ஓட்டுகள் பெற்றார். இந்த வார்டில் போட்டியிட்ட சுயேச்சை ஆரிப் என்பவர் ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இதே போல் 16வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் சதாம் உசேன் 4 ஓட்டுகளும், அதே வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முகமது ரபிக் ஒரு ஓட்டும், 17வது வார்டில் சுயேச்சை ஹனிபா ஒரு ஓட்டும் பெற்றனர். பிரதான கட்சியான அ.தி.மு.க., வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு பெற்றது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.