விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.
இதில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் பதிவான வாக்குகள், கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று எண்ணப்பட்டன. இதில் 14 வார்டுகளில் திமுக, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 17 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, கோட்டகுப்பம் நகராட்சியை கைப்பற்றியது. மேலும் அதிமுக 3 இடங்களிலும், சுயேட்சைகள் 6, பாமக 1 இடத்திலும் வெற்றி பெற்றன. கோட்டக்குப்பம் நகராட்சியை திமுக கைப்பற்றியதை தொடர்ந்து, திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோட்டகுப்பம் நகராட்சி முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.