
கோட்டக்குப்பம் நகராட்சியில் வார்டு மறுவரையறையில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது அனைவரும் அறிவோம்.
உதாரணத்துக்கு வார்டு 12யில் வெறும் 524 ஓட்டும், வார்டு 27 ல் 1383 ஓட்டு பிரித்து வஞ்சித்துள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குள்ளது.
மேலும் பல வாக்காளர்களை அவர்கள் இருக்கும் வார்டிலிருந்து வேறு ஊர்களுக்கு பந்தாடியுள்ளனர்.
அதில், கோட்டக்குப்பம் மெயின் ரோடு வார்டு வசிபவர்களை பெரியமுதலியார்ச்சாவடிக்கும், அதே போல் அங்கே இருப்பவர்களை சின்ன கோட்டக்குப்பம் வார்டில் பதிந்துள்ளனர்.
ஒவ்வொரு வார்டுகளிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாக்களர்களின் பெயர், வேறு வார்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற தேர்தலில் தனது ஓட்டு எந்த வார்டில் உள்ளது என தெரியாமல் வாக்காளர்கள் திண்டாடினார். தங்கள் ஓட்டு போடும் வார்டை கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் பலர் இன்று அலைந்தது நேரில் காணமுடிந்தது.
வார்டு குளறுபடி எதுக்கு செய்தர்கள், என்ன ஆதாயத்துக்காக செய்தனர் என்று வரும் தேர்தல் முடிவு சொல்லிவிடும்…