

கொரோனா கொடூரமாக மக்களை காவு வாங்கும் நேரத்தில், சொந்தம் பந்தம் குடும்பமே இறந்தவர் பக்கத்தில் வர அஞ்சிய நேரத்தில், இந்த SDPI கட்சி சகோதரர்கள் தான் இறந்தவர்களை நல்லமுறையில் நல்லடக்கம் செய்தார்கள். மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் இரவு பகலாக எந்நேரமும் கூப்பிட குரலுக்கு ஓடி வந்தவர்கள். சந்தோசத்தில் நம்முடன் பலர் இருப்பார்கள்.. கஷ்டத்தில் கூட இருந்த இவர்களின் சேவையை மறந்துவிடாதீர்கள்.
வேட்பாளர்கள் ஓட்டு கேட்கும்போது இனிமேல் செய்யக்கூடிய பணியை சொல்லி ஓட்டு கேட்பார்கள்.
ஆனால் இவர்களோ இதற்கு முன் செய்த பணியை சொல்லி ஓட்டு கேட்கிறார்கள்..
உங்கள் குடும்பம் சொந்தம் பந்தம் நண்பர்கள் யாராவது ஒருவராவது இவர்களின் சேவையை பெற்றிருப்பீர்கள். இவர்களின் சேவையை நேரில் பார்த்திருப்பீர்கள்.
எப்போதும் மக்களோடு மக்களாய் அதிகாரத்தில் இருந்தாலும் சரி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்க தயாராக இருக்கும் இவர்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால் மக்களுக்காக உழைப்பார்கள்..