
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில், 2 வார்டுகளிலும் தலா 10 பேர் போட்டியிடுவதால், வெற்றியை கணிக்க முடியாமல் வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 145 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், சுயேச்சைகள் 72 பேர் போட்டியிடுகின்றனர். 12வது வார்டில் அ.தி.மு.க., – தி.மு.க., – பா.ம.க., – ம.நீ.ம., என நான்கு பேரும், சுயேச்சைகள் 6 பேர் என 10 வேட்பாளர்களும், 16வது வார்டில், அ.தி.மு.க., – தி.மு.க., – எஸ்.டி.பி.ஐ., – ம.நீ.ம., – நாம் தமிழர் கட்சி என 5 பேரும், சுயேச்சைகள் 5 பேர் என 10 பேர் போட்டியிடுகின்றனர். இதனால், இந்த 2 வார்டுகளிலும், யார் வெற்றி பெறுவார்கள் என கணிக்க முடியாமல் வேட்பாளர்கள் திணறி வருகின்றனர்.
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில், 2 வார்டுகளிலும் தலா 10 பேர் போட்டியிடுவதால், வெற்றியை கணிக்க முடியாமல் வேட்பாளர்கள் திணறல்.

