
உள்ளூர் அரசியல் பிரமுகராக கவுன்சிலர் இருப்பதால், எப்போதுமே உள்ளாட்சித்தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. வாக்காளர் ஓட்டுகள் கைகொடுத்தால், சுயேட்சையாக போட்டியிடுபவரும், உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் வெல்ல வாய்ப்புண்டு. கோட்டக்குப்பம் புதிய நகராட்சிக்கு 27 வார்டுகளுக்கு தேர்தல் களத்தில் நிற்கும் 145 வேட்பாளர்களில் பாதிபேர் அதாவது 72 பேர் சுயேட்சைகள்..
கடந்த 2011ல் நடந்த கோட்டக்குப்பம் பேரூராட்சி தேர்தலில், 18 வார்டுகளில், அதிக இடங்களில் வெற்றிபெற்று தலைவராக சுயேட்சையே தேர்தெடுக்கப்பட்டார்.
கடந்த தேர்தலில் தனித்தனியே போட்டியிட்ட கட்சிகள், நடப்பு தேர்தலில் கூட்டணியில் இணைந்துள்ளன.அதேசமயம், வார்டு கிடைக்காத அதிருப்தியில் உள்ள கட்சியினர், சுயேட்சையாக அதிகளவில் போட்டியிடுகிறார்கள்..
ஜெயிக்க போவது யாரு …